திருச்செந்தூர் - உயர்த்த பட்ட தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்டோர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 நவம்பர், 2023

திருச்செந்தூர் - உயர்த்த பட்ட தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்திய 200க்கும் மேற்பட்டோர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், நவ.16,  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உயர்த்தப்பட்ட தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, திருச்செந்தூர் கோவில் அலுவலகம் முன்பு பக்தர்கள் போராட்டம்.


தற்போது கந்த சஷ்டி விழா நடந்து வரும் நிலையில் தரிசன கட்டணம் உயர்த்தபட்டுள்ளது, சிறப்பு தரிசனம், விஸ்வரூப தரிசனம் ஆகியவற்றுக்கு ஆயிரம் இரண்டாயிரம், மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப் படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர், இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட கூட்டத்தை கலைப்பதற்காக புகுந்த ஆத்தூர் காவல் துறை ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது.


அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக பக்தர்கள் & போராட்டகாரர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்து முன்னணி சார்பில் மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி கோட்ட தலைவர் தங்க மனோகர் மாவட்டசெயலாளர் அருணாச்சலம் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/