சிப்காட் - ஒரு லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட 2 மாடுகள் மீட்பு - இருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

சிப்காட் - ஒரு லட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட 2 மாடுகள் மீட்பு - இருவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய 2 பேர் கைது - ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 2 மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனம் பறிமுதல்.


சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்நகர் பகுதியைச் சேர்ந்த துரைகனி மகன் உத்தண்டுராஜ் (39) என்பவர் கடந்த 15.11.2023 அன்று இரவு  தனது மாடுகளை தனது வீட்டு முன்பு உள்ள மாட்டு கொட்டைகையில் கட்டி வைத்துள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது அதில் 2 மாடுகள் திருடு போனது தெரியவந்துள்ளது.


இதுகுறித்து உத்தண்டுராஜ் நேற்று (18.11.2023) அளித்த புகாரியின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மாரியப்பன் மகன் வேலாயுதம் (24), செம்புலிங்கம் மகன் மாசானமுத்து (21) மற்றும் சிலர் சேர்ந்து மேற்படி மாட்டு கொட்டைகையில் கட்டியிருந்த 2 மாடுகளை மினி சரக்கு வாகனத்தின் மூலம் திருடிச் சென்றது தெரியவந்தது.


இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் எதிரிகளான வேலாயுதம் மற்றும் மாசானமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள 2 மாடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/