குமரி மாவட்டத்தில் 100- ஆட்டோ ஓட்டுநர்களுடன் பி.டி. செல்வக்குமார் தீபாவளி கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 நவம்பர், 2023

குமரி மாவட்டத்தில் 100- ஆட்டோ ஓட்டுநர்களுடன் பி.டி. செல்வக்குமார் தீபாவளி கொண்டாட்டம்.

குமரி மாவட்டத்தில் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கி, கலப்பை மக்கள் இயக்க தலைவர் தீபாவளியை கொண்டாடினார். வடசேரி, அஞ்சு கிராமம், கோட்டாறு, பகுதியை சேர்ந்த நூறு ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பி.டி. செல்வகுமார் பேசிய போது: " தீமைகளை தீயில் பொசுக்கி, தீய எண்ணங்களை குப்பையிலிட்டு, நல்ல எண்ணங்களை வளர்க்கும் புதிய தொடக்கம் தான் தீபாவளி. எதிர்மறை சக்தி வறுமை அகல வேண்டும். நான் இன்று ஆட்டோ ஓட்டுநர்களுடன் தீபாவளி கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


தினசரி வெயில், மழை, உறக்கம் பாராமல் உழைப்பவர்கள். குண்டு- குழி குறுகிய பாதை என்று பாராமல் மக்களை கரை சேர்ப்பவர்கள். அவர்களது வருவாய் தினசரி குடும்பம் நடத்துவதற்கே போதாது. இந்த சூழலில் பட்டாசு வாங்கி, புது துணி எடுத்து தீபாவளி கொண்டாடுவது கடினம் என பல ஆட்டோ ஓட்டுநர்கள் என்னிடம் கூறினார்கள். அதனால் தான் அவர்களின் தீபாவளி கனவை அவர்களது குடும்பத்தோடு கொண்டாடினேன். ஒவ்வொரு குடும்பத்திலும் வறுமை என்னும் அரக்கன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். நாட்டில் வறுமை என்ற அரக்கனை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும். அப்போதுதான் தீபாவளி வலியில்லாத தீபாவளியாக அமையும்." இவ்வாறு பி.டி.செல்வகுமார் பேசினார்.


இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி டாக்டர் ரங்கநாயகி, பேராசிரியர் ராமமூர்த்தி, செயலாளர் ராஜன், பொருளாளர் சிவராஜன், வர்த்தக அணி தலைவர் விஸ்வை சந்திரன், துணை செயலாளர் விஸ்வை பாலகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் வரலட்சுமி, மற்றும் கலப்பை மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/