பத்திரப்பதிவிலுள்ள பிரச்சனைகள நீக்கி எளிமையான முறையில் அமைத்திட வேண்டும் என்று பெண்கள் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனுநீதி நாள் நடைபெற்றது. அஞ்சுகிராமம் பகுதியைச் சார்ந்த வரலட்சுமி என்பவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஏழைப் பெண்கள் நிலங்களை பத்திர பதிவு செய்வதற்கு தடையாக இருக்கும் 22 ஏ என்ற பிரிவினை நீக்கி அரசு விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை எளிமையாக்கி பத்திரப்பதிவு நடைபெற வழி செய்ய வேண்டும் என்றும் பத்திர பதிவு நடைபெறாமையால் தங்கள் வீட்டு பெண்களின் திருமணம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என பல்வேறு பிரச்சனைகளை கூறி மாவட்ட ஆட்சியர்டம் மனு அளித்தனர்.
மனுவை வாங்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது பற்றி ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம், விஜயதாரணி ஆகியோர் மாவட்ட வளர்ச்சி கூட்டத்தில் பேசியிருப்பதாகவும் இது பற்றி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக