கன்னியாகுமரி:அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவர் கே.எஸ்.மணி, செயலாளர் ராஜன், கல்லூரி முதல்வர் டாக்டர். ஆர்.ஐ. ராம்குமார், கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஐ.முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் டாக்டர் ராகேஷ், ரத்ததான முகாமை நடத்தினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினார்கள். முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ்.சுதாகர் செய்திருந்தார்.
- கன்னியாகுமரி செய்தியாளர் என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக