பள்ளி வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் திருவிழா அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் நடத்தப்படுகிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

பள்ளி வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் திருவிழா அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் நடத்தப்படுகிறது.

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி வட்டாரம் மாவட்டம் மற்றும் மாநில அளவில் திருவிழா அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் நடத்தப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 2023.,24 ம் ஆண்டில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்9ஆம் தேதிமுதல் தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. பள்ளி அளவில் 63ஆயிரத்து 200 மாணவர்கள் அணைத்து வகை போட்டிகளிலும் பங்கு கொண்டுள்ளனர். 


இவர்களில் பள்ளி அளவில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர். வட்டார அளவிலான போட்டிகள் மதுரை மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் 18.10.23 முதல்  21.10.23.   வரை 4  நாட்கள் அந்தந்த ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளில் நடைபெறுகிறது. இதனை ஒட்டி வட்டார அளவிலான போட்டிகளை  18.10.23 இன்று மதுரை அலங்காநல்லூர் ஒன்றியத்தில்  முதன்மை கல்வி அலுவலர்  கா. கார்த்திகா  குத்து விளக்கேற்றி சிறப்பாக தொடங்கி வைத்தார். 


போட்டிகள் 9 வகையான கலை இனங்களில் 180 க்கு மேற்பட்ட  போட்டிகளில் மாணவர்கள் பங்கு கொள்கின்றனர். பள்ளி வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள்  மாநில திட்ட இயக்குனர்  அறிவுரையின் கீழ் சிறப்பாக போட்டி நடத்தி முடித்திட மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பள்ளி அளவில் வட்டார அளவில் மாவட்ட அளவில்  கலைத் திருவிழா குழுக்கள் அமைத்து  போட்டிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். வட்டார அளவிலான போட்டிகளில் மதுரை மாவட்டத்தில் 19,700 மாணவ மாணவியர் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 26 முதல் 28ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தில்   நடைபெற   உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/