ராஜபாளையத்தில் பக்தர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த நகர் மன்றத் தலைவி. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

புதன், 25 அக்டோபர், 2023

ராஜபாளையத்தில் பக்தர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்த நகர் மன்றத் தலைவி.

.com/img/a/

ராஜபாளையத்தில் சரஸ்வதி பூஜை முன்னிட்டு கொலு வைத்து பஜனை பாடிய பக்தர்கள்.  பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பக்தர்களுடனும் பொதுமக்களுடனும் ஆடல் பாடல் பாடி சரஸ்வதி பூஜை கொண்டாடிய ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பக்தர்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது.


தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு கோயில்களில் சிறப்பு ஆராதனைகள் வழிபாடுகள் நடத்தப்பட்டு கொழு அமைத்து பஜனை பாடி சரஸ்வதி பூஜை கொண்டாடி வருகின்றனர்.


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பகுதியில் உள்ள லட்சுமணப் பெருமாள் சுவாமி திருக்கோவிலில் அப்பகுதி பெண்கள் அனைவரும் ஒன்றினைந்து கொழுவைத்தும் பஜனை பாடல்கள் பாடியும் லட்சுமணப் பெருமாள் சுவாமியை வழிபட்டு வந்தனர்.


இந்த நிலையில், பெண் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க  அக்கோவிலுக்கு வருகை தந்த ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷயாம் பக்தர்களுடனும், பொதுமக்களுடனும் பஜனையில் கலந்து கொண்டு சுவாமி பாடல் பாடி வழிபாடு மேற்க்கொண்டார். பஜனை பாடல்கள் முடிவுற்றதை அடுத்து, பக்தர்கள் கும்மியடித்து கோலாட்டம் ஆடி ஆடல் பாடலுடன் வழிபாடு செய்தனர்.


மேலும், பூஜையில் கலந்து கொண்ட நகர மன்ற தலைவி, பக்தர்கள் கும்மி மற்றும் கோலட்டம் ஆடி ஆடல் பாடலுடன் வழிபாடு மேற்க்கொள்ள வற்புறுத்திய நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கிய நகர மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் பக்தர்களுடனும் பொதுமக்களுடனும் இணைந்து கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் ஆடல் பாடலுடன்  சுவாமி வழிபாட்டில் பங்கேற்றார்.


பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பூஜையில் கலந்து கொண்டது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad