கரூர் மாவட்டம் மின்னாம்பாள்ளி அருள்மிகு குளக்கரை வன்னியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 அக்டோபர், 2023

கரூர் மாவட்டம் மின்னாம்பாள்ளி அருள்மிகு குளக்கரை வன்னியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்.


மும்மன்னர்களின் முதல்வனாம் சேர மன்னனின் ஆட்சியில் தலைநகராய் கொண்டதும் முசுருந்த சக்கிரவர்த்தியின்ட்சியின் கீழ் செழித்து வளர்ந்ததும் கொங்கு ஏழு தலங்களில் முதல் தலமாக விளங்குவதூம் கருணையே வடிவமான கல்யாண அருள்பெற்ற கரு நின்ற ஊர் எனும் கருவூர் பசுபதீஸ்வரர்.

அக்கரூர் பொய்கை பொன்னி நதியாம் காவிரியின் தென்பாலும் அமராவதியின் வடபாலும் இதன் மத்தியில் கொங்கு கிழங்குநாடு மின்னாம்பள்ளி எனும் நற்பதியில் எழுந்தருளி வந்து வணங்கிடும் நமது கொங்கு வெள்ளாள விளையன்குல மக்களுக்கு குலதெய்வமாம் விண்ணுலகம் போற்றும் விரும்பித்தொழும் அடியார்கள் வினைகள் தீர்த்து மண்ணுலகத்தில் அவதரித்து வேதத்தின் வடிவாய் விளங்கும் வித்துக்கு வித்தாகி புத்தியும், சக்தியும் தந்து அருளும் குளக்கரை ஸ்ரீ வன்னியம்மன் மற்றும் முழுமுதற் கடவுளாய் விளங்கும் ஸ்ரீ விநாயகர் காவல் தெய்வமாம் ஸ்ரீ கருப்பண்ணசுவாமி கிராம தெய்வமாம் ஸ்ரீ மதுரைவீர சுவாமி சகல பரிவார தெய்வங்கள் மற்றும் மூலஸ்தான கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், கல்ஹார வேலைகள், ஐந்து நிலை ராஜகோபுரம், குதிரை வாகனம் ஆகியவை சிற்ப வேத ஆகம சாஸ்திர முறைப்படி அமைக்கப்பற்றும் பஞ்சவர்ண கலாலேபனம் திட்டப்பட்டு இன்று 27.10.2023 வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை முடிந்து.

ராஜ கோபுரம், மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வ விமான கலசங்களுக்கு  புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் எனும் பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது, தொடந்து மூலவர் அருள்மிகு குளக்கரை வன்னியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தசதானம் தச தரிசனம் அபிசேகம் செய்து தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.


இவ்விழாவில் குல குடிப்பாட்டு மக்களும், பெரியோர்களும் உற்றார் உறவினர்களும் ஆன்மீகச் சான்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மேலும் 2 நாட்கள் அன்னதானம் சிறப்பாக நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை மின்னாம்பள்ளி ஶ்ரீ வன்னியம்மன் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/