தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகங்களில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவர்கள் கலெக்டரை நேரடியாக சென்று சந்தித்து மனு அளித்து தீர்வு கண்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டங்களில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு எந்த துறையைச் சார்ந்தது என்று கலெக்டர் பார்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் அந்த மனு அளிக்கப்பட்டு தீர்வு காண அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது அதிக அளவிலான மக்கள் மனு கொடுப்பதற்காக வந்திருந்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை உருவானது.
இதற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததே மக்களின் கூட்டம் அதிகரிக்க காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மூலம் பெறப்பட்ட மனுக்களை அந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக