தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் சுருள் வாள் போட்டிகளில் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் சுருள் வாள் போட்டிகளில் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி.

தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் சுருள் வாள் போட்டிகளில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிலம்பம் மற்றும் சுருள் வாள் தேசிய போட்டிகள் தஞ்சாவூரில் உள்ள பாரத் கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுக்களாக நடைபெற்ற போட்டிகளில் ஒற்றைச் சிலம்பம் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் தருண்சன் முதலிடம் பிடித்தார்.


சுருள் வாள் சுழற்றுதல் பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் கேசவராம் முதலிடம் பிடித்தார். இளையோர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவர் கார்த்திகிருஷ்ணா ஒற்றைச் சிலம்பம் சுற்றுதலில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் மேயர் சன் ராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்ன. பதக்கங்களும், வெற்றிக் கோப்பைகளும் பாரத் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டன.  


நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பரிசு பெற்ற மாணவர்களையும் பயிற்சிகளை ஒருங்கிணைத்த இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர், தனபால் ஆகியோரையும் தாளாளர் சுதாகர் பாராட்டினார். ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/