விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு டாக்ஸி சங்கத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சாலை வரியை தமிழக அரசு கைவிட கோரியும், புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும், கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது, ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு டாக்ஸி செயலாளர் கண்ணன், நகரக் கன்வினர் சுப்பிரமணியம் மற்றும் அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக