‎மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் எல்லாபுரம் வட்டார வளமையம் சார்பில் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 அக்டோபர், 2023

‎மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் எல்லாபுரம் வட்டார வளமையம் சார்பில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பெரியபாளையம் அரசினர் மேல்நிலை பள்ளியில் அருகில் அமைந்துள்ள வட்டார வளமையத்தில் நடைபெற்றது. 


இந்த முகாமில் பொன்னேரி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) இளங்கோவன்,  பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.சம்பத், வட்டார கல்வி அலுவலர்கள்  ஏ.சாது சுந்தர் சிங், எஸ்.கல்பனா, ஊத்துக்கோட்டை அரிமா சங்கம் டி.பி.துளசிராம், அரிமா செயலாளரும் ஊத்துக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான மு.தமிழ்செல்வன் ஊத்துக்கோட்டை வணிகர் சங்க தலைவர் கே.நடராஜன், ஊத்துக்கோட்டை அரிமா சங்கத்தின் பொருளாளர் எஸ்.சிட்டிபாபு,என்.மணி, மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் கழக தலைவர் ஐ.ஏழுமலை, பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் பத்மாவதி, மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.கவிதா, ஆசிரியப் பயிற்றுநர்கள் சதீஷ்குமார், வீரபத்திரம், கீதா, இந்த முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு செவித்திறன் பரிசோதனை. கண் பரிசோதனை. அறிவுத்திறன் பரிசோதனை. உடல் இயக்க பரிசோதனை. ஆகிய பரிசோதனைகளை பரிசோதித்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டையை அலுவலர்கள் வழங்கினர்.


ஊத்துக்கோட்டை அரிமா சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது  மற்றும் இந்த முகாமில் சிறப்பாசிரியர்கள் இயன் முறை மருத்துவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/