விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செயின்ட் மேரிஸ் பள்ளியில் சாரணர், சாரணியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பாரத சாரண இயக்கத்தின் மாநில உதவி பயிற்சியாளர். மெகபூப் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
நிகழ்ச்சியில், சாரண இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, செயின்ட் மேரிஸ் பள்ளியின் சாரண ஆசிரியர் பிரபாகரன் செய்திருந்தார். பயிற்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கீதா மேரி பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக