தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை - டீன் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை - டீன் தகவல்.

தூத்துக்குடி, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. 


இதில் மருத்துவர் சிவக்குமார் முதல்வர் ஆரம்பித்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தூத்துக்குடி அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை மேலும் புற்று நோய்க்கான மருந்து செலுத்தும் பிரிவு அனைத்தும் உள்ளது. எனவே நோயாளிகள் இதற்கான சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்ல வேண்டாம். நோயை கண்டுபிடிக்கும் வண்ணம் தொற்றா நோய் கண்டுபிடிக்கும் பிரிவு உள்ளது. 


அங்கு இவர்களுக்கு பரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது. மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் கருவியும் நம் மருத்துவமனையில் உள்ளது. ஒரு புதிய முயற்சியாக பெண்கள் கூட்டமாக வேலை செய்யும் இடத்திற்கே சென்று நோயாளிகளை கண்டறியும் ஒரு முறையும் தமிழகத்திலே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.


ஒரு வேன் மூலமாக அதற்கான ஸ்கேன் செய்யப்படும் கருவியோடு ஊழியர்கள் அங்கே இருக்கும் இடத்திற்கே சென்று பரிசோதனை செய்து, ஸ்கேன் செய்து பின்பு அவர்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் இருக்குமானால் அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு வருமாறு அழைத்து அவர்களை முற்றிலும் குணமாக்கும் வசதி செயல்பட்டு வருகிறது என்பதையும் முதல்வர் விளக்கி கூறினார்கள்.


இந்த நிகழ்வில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர் டாக்டர் அமுதன் கதிரியக்க சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் லலிதா மற்றும் மருந்து செலுத்தும் பிரிவு தலைவர் டாக்டர் காந்திமதி பங்கேற்றார்கள். மேலும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன் உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி, மருத்துவர் குமரன் துணை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள் முதுநிலை கல்வி மாணவர்கள் மருத்துவ மாணவர்கள் செவிலிய மாணவ மாணவியர் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் நோயாளிகள் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/