நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில்  புகைப்படக்கண்காட்சி.


தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நகத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம். மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம். நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையில் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது. 


இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம். கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம். நமக்கு தாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனாவர்களின் நலன் கருதி பணிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்து மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. 


பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது. காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது.மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை ஸ்டாலினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற பி.என் ஸ்ரீதர் நேரில் சந்தித்தது.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  நலத்திட்ட உதவிகள் வழங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ். மாநில அளவிளையாட்டு
போட்டிகளை துவக்கி வைத்தது. கோவிட் காலகட்டத்தில் கணவனை இழந்தவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரித்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/