பூதப்பாண்டி பகுதியில் அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

பூதப்பாண்டி பகுதியில் அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும்.

.com/img/a/


பூதப்பாண்டி பேரூராட்சியின் கூட்டம் தலைவர் ஆலிவர்தாஸ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை தலைவர்அனில்குமார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மரியா அற்புதம், ஈஸ்வரி, கலா, அசாருதீன், நபீலா அன்சார், யூனிஷ்பாபு, டதி செல்வபாய், முருகன் பிள்ளை, ஜெசி தம்பி,முத்துலெட்சுமி, மெர்சி பாய் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 


கூட்டத்தில் பூதப்பாண்டியை அடுத்துள்ள 12-வது வார்டு துவரங்காடு பகுதியில் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக்) மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும்காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையே சேவை தொடர்பாக பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையை பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad