குரும்பூர் - கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகன் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 23 அக்டோபர், 2023

குரும்பூர் - கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகன் கைது.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு செய்து இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த தந்தை மற்றும் மகன் கைது.



திருச்செந்தூர் வ.உ.சி தெருவை சேர்ந்த ஆனந்த கணேசன் மகன் முத்துவேல் (23) என்பவருக்கும், குரும்பூர் புரையூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் ஜவகர் (51) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.



இந்நிலையில் இதன் காரணமாக நேற்று (22.10.2023) குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு புரையூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முத்துவேலிடம் அங்கு வந்த மேற்படி ஜவகர் மற்றும் அவரது மகன் சுரேஷ் (24) ஆகியோர் சேர்ந்து முத்துவேலிடம் தகராறு செய்து அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


இதுகுறித்து முத்துவேல் அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து மேற்படி எதிரிகளான ஜவகர் மற்றும் அவரது மகன் சுரேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad