ஆழ்வார்திருநகரி - கஞ்சா வழக்கில் ஒருவர் கைது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

ஆழ்வார்திருநகரி - கஞ்சா வழக்கில் ஒருவர் கைது.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த எதிரி கைது - 350 கிராம் கஞ்சா, ரொக்க பணம் ரூபாய் 1,650/- மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று (15.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி மறவன்மடம், ஜெபஆசீர் நகரைச் சேர்ந்த சோமு மகன் கந்தையா (எ) கந்தசாமி (39) என்பதும் அவர் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி கந்தையா (எ) கந்தசாமியை கைது செய்து அவரிடமிருந்த 350 கிராம் கஞ்சா, ரொக்கபணம் ரூபாய் 1,650/- மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad