சேத்தியாத்தோப்பு அருகே
தேசிய நெடுஞ்சாலையில் சமப்படுத்தப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்பட்டது.
கிராம மக்கள்,வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.
கடலூர் மாவட்டம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பின்னலூர் கிராமப் பகுதியில் இரண்டு இடங்களில் வேகத்தடை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இதனால் விபத்துக்கள் ஏற்படாமல் இந்த வேகத்தடை தடுத்து வந்தது. தற்போது சாலை பராமரிப்பு பணி என்ற பெயரில் வேகத்தடை மறைக்கப்பட்டதால் இப்பகுதி மக்கள் மீண்டும் வேகத்தடை அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் நெடுஞ்சாலை துறை மற்றும்
மாவட்ட நிர்வாகம் வேகத்தடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதனை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சாலைமறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் மறைக்கப்பட்ட
இரண்டு இடங்களிலும் மீண்டும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது . இதனால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக