சோழவந்தான் பகுதியில் உள்ள கோவில்களில் நவராத்திரி விழா ஒன்பது நாட்கள் நடந்தது. பத்தாம் நாள் நேற்று விஜயதசமி விழா சிறப்பாக நடந்தது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மன் வைகை ஆற்றுக்கு எழுந்தருளி அங்கு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. செயல்அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முகவேல் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் செயல்அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலையிலும், திரௌபதி அம்மன் கோவிலில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, குப்புசாமி, ஜவஹர்லால் ஆகியோர் முன்னிலையில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில் அம்மன் புறப்பட்டு தச்சம்பத்து கிராமத்தில் உள்ள நந்தவனத்தில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன்செட்டியார், பரசுராமன் அர்ச்சகர், கோவில்பணியாளர் பழனி குமார் ஆகியோர் முன்னிலையிலும், தென்கரை அகிலாண்டஈஸ்வரி அம்மன் கோவில் செயல்அலுவலர் பாலமுருகன்,கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி ஆகியோர் முன்னிலையிலும், கீழ மட்டையான் வாலகுருநாதர் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் கச்சிராயிருப்பு கிராமத்தில் பரம்பரைபூசாரி ராஜாங்கம் முன்னிலையிலும் அந்தந்த கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர். பாதுகாப்பு பணியில் சோழவந்தான் மற்றும் காடுபட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக