பூண்டி அருகே சீத்தஞ்சேரியில் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

பூண்டி அருகே சீத்தஞ்சேரியில் குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

பூண்டி அருகே சீத்தஞ்சேரியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியம் அம்மம்பாக்கம் ஊராட்சி சீத்தஞ்சேரியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எம்.இந்திரா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழா பேருரையாற்றி 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்தார். 


பூண்டி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான் (எ)எம்.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கச்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் திட்டம் சார்ந்த சிறப்புரை ஆற்றினார். இந்த விழாவில் பூண்டி ஒன்றிய துணைதலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ராகவன், வேல்முருகன், சீத்தஞ்சேரி நாகராஜ், கூனிப்பாளையம் ஆர்.ரகு, டி.பி.புரம் சீனிவாசன், பாலாஜி என்கின்ற நாகபுஷ்ணம், பூண்டி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சித்ரா பாபு, பாபு, மாவட்ட கவுன்சிலர் சுதாகர், ஊத்துக்கோட்டை நகர செயலாளர் அபிராமி குமரவேல், ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட அணிகள் மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள் கே.வி.லோகேஷ், சங்கர், கோல்ட் மணி என்கின்ற மணிகண்டன், நந்திமங்கலம் விஜயன், காண்டீபன், பேரிட்டிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார், ரஹீம், கச்சூர் ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமான இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

விழாவின் முடிவில் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அம்மம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரசு பூபாலன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/