ஆத்தூர் - பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை - போலீசார் விசாரணை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

ஆத்தூர் - பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர்  அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர்  அருகே முக்காணி குருவித்துறை பகுதியில் வசிப்பவர் மாரிமுத்து. இவரது மகள் மீனாட்சி (16), ஆத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக வயிறு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தாராம். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சரி வரவில்லையாம்.


இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மீனாட்சி நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று மீனாட்சி சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad