பொன்மார் ஊராட்சியில் அரசு பேருந்துக்கு ஆயுத பூஜை நடத்திய தலைவர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

பொன்மார் ஊராட்சியில் அரசு பேருந்துக்கு ஆயுத பூஜை நடத்திய தலைவர்.

.com/img/a/

செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.நாராயணன் தலைமையில் ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.ஆயுத பூஜை முன்னிட்டு  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள துப்புரவு வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.நாராயணன் தாம்பரத்தில் இருந்து தினமும் பொன்மார்க்கு வந்து செல்லும் அரசு பேருந்திற்கு சிறப்பு பூஜை செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மரியாதை  செலுத்தினார்.பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு,

இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.மேலும் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் பி.டி.வெங்கடேசன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad