அனைவருக்கும் பாகுபாடு இன்றி மகளிர் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்திபாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரியபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 அக்டோபர், 2023

அனைவருக்கும் பாகுபாடு இன்றி மகளிர் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்திபாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரியபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைவருக்கும் பாகுபாடு இன்றி  மகளிர் உரிமைத் தொகை வழங்க வலியுறுத்திபாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரியபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய பாஜக சார்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதியான அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஜெ.ரவி தலைமையில் நடைபெற்றது. 


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் எம்.பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டி.எல்.பி.நாயுடு அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன், ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் கே ஜி.எம் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.பிரபாகரன், மஞ்சை எம்.ஆனந்தன், வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு தலைவர் ஆர்.சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் பூலித்துரை, மண்டல பொறுப்பாளர் சிதம்பரலிங்கம், ஒன்றிய பொதுச்செயலாளர் இ சரவணன் உள்ளிட்ட மாவட்ட மண்டல மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கண்டன  கோஷ்டங்களை எழுப்பினர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எல்லாபுரம் மேற்கு ஒன்றிய அமைப்பாளர் எம்.ஜெயப்பிரகாஷ், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் மஞ்சை சுதாகர் ஆகியோர் நன்றி கூறினர்.


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/