இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் ஒன்றியம் திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி பிரேமலதா தலைமையில் நடைபெற்றது
இதில் இராணிப்பேட்டை சட்ட ஆலோசகர் சங்கரன் கலந்து கொண்டு முதியோர் நல சட்ட விழிப்புணர்வு வழங்கினார் மேலும் முதியோர் களுக்கு மருத்துவரை அழைத்து மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது நிகழ்ச்சியில் முதியோர் இல்ல நிர்வாகிகள் விக்டோரியா ஜெஸ்ட்டீனா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
மேலும் மகளிர் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி மற்றும் சுந்தரமூர்த்தி முதியோர் நலன் இருவரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் MS GS கலந்து கொண்டு நன்றிவுரை வழங்கினர்
முதியோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கி விழா நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக