கீழ் சிறுதானியங்களின் பயிர்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்த உள்மாநில விவசாயிகள் பட்டறிவு பயணம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 அக்டோபர், 2023

கீழ் சிறுதானியங்களின் பயிர்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்த உள்மாநில விவசாயிகள் பட்டறிவு பயணம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து கள்ளிக்குடியில் வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் சிறுதானியங்களின் பயிர்களில் மதிப்புக்கூட்டுதல் குறித்த உள்மாநில விவசாயிகள் பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. காமட்சிபுரம் சென்டெக் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன்  சிறுதானிய பயிர்களின் மகத்துவம் பற்றியும் மற்றும் உலக உணவு தினத்தை பற்றியும் விவசாயிகளிடம் விளக்கினார். 


மனையியல்துறை பேராசிரியை ரம்யா சிவ செல்வி  சிறுதானியங்களின் முக்கியத்துவம் பற்றியும் சிறுதானியத்தின் மூலம் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் சத்துக்கள் பற்றியும், அதன் தயாரிப்பு முறைகள் பற்றியும் செயல்விளக்கமாக செய்து காண்ப்பித்தார். சோலர் டையா; மற்றும் சேமிப்பு கலன்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றும் இயந்திரங்களும்; அவற்றின் செயல்பாட்டு முறைகளும் விவசாயிகளின் பார்வைக்கு நேரடியாக காண்ப்பிக்கப்பட்டது. 


தேனீ தீபன் சிறுதானியங்கள் ஆலையில் விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட அரிசி வகைகள், சிறுதானிய தீபண்டங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் செயல்விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சுவாசினி சிறுதானிய உணவு மைய தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுவாஷினி அவர்கள் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் பற்றியும், சிறுதானிய சுப் வகைகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இப்பயணத்திற்கு கள்ளிக்குடி, திருமங்கலம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 50 விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். 


பயணத்திற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி மற்றும் வே.யுவராஜ்குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/