சேத்தியாத்தோப்பு அருகே மருதூரில்வள்ளலார் அவதார தின விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 அக்டோபர், 2023

சேத்தியாத்தோப்பு அருகே மருதூரில்வள்ளலார் அவதார தின விழா.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் அவதார இல்லம் அமைந்துள்ளது.. வள்ளலார் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி ராமையா பிள்ளை சின்னம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் .பல்வேறு உயிர் கொல்லாமையை வலியுறுத்திய அவர்எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வலியுறுத்தினார். மக்கள் பசிப்பிணியால் வாடுவதைக்கண்ட அவர் பசி எனும் நோயை போக்க வடலூரில் தரும சாலையை நிறுவி 150 ஆண்டுகளுக்கும் மேலாக அணையா அடுப்பின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.


அனைவரும் இறைவனை ஜோதி வடிவாக காணலாம் என பல்வேறு தத்துவங்களை இந்த மண்ணில் தான் வாழும் காலத்தில் எடுத்துரைத்தவர் திருவருட்பிரகாச வள்ளலார். அவர் இந்த உலகை விட்டு மனித வடிவை விட்டு நீங்கி ஜோதி வடிவில் மறைந்த பின்னும் அவரது கருத்துக்கள்,வாழ்க்கை நெறிகள் எப்போதும் உயிர்ப்போடு இருந்து கோடிக்கணக்கான  பக்தர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. மக்களை நல்வழிப் படுத்துகிறது. இந்நிலையில் அவரின் 201 வது அவதார தினம் புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் அவரது அவதார இல்லத்தில் நாளை 05-10-2023 வியாழக்கிழமை காலை சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டு சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது. 


இந்நிலையில் வள்ளலார் வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையில் சர்வதேச மையம் உருவாக நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/