கரூர் நகரில் அண்ணா வளைவு ஆலமர தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி வேப்பபூ மாரியம்மன், காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 அக்டோபர், 2023

கரூர் நகரில் அண்ணா வளைவு ஆலமர தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி வேப்பபூ மாரியம்மன், காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா.

IMG_20231021_135705_187

கரூர் நகரில் அண்ணா வளைவு ஆலமர தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஆதி வேப்பபூ மாரியம்மன், காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. நேற்று நவராத்திரியின் ஆறாம் நாள் கௌமாரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.


தொடர்ந்து இன்னும் நான்கு நாட்கள் சாமிக்கு காலை அபிஷேகமும் மாலை சிறப்பு அலங்காரம் நடைபெற்று வருகின்ற, திங்கள்கிழமை  சரஸ்வதி பூஜையும், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் விஜயதசயை முன்னிட்டு நவராத்திரியின் முக்கிய நிகழ்வான அம்பு போடும் நிகழ்வு நடைபெறுகிறது. 


தொடர்ந்து புதன்கிழமை மாலை ஊஞ்சல் உற்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரார்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad