தூத்துக்குடி - ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி மீது அதிருப்தி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

தூத்துக்குடி - ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் தூத்துக்குடி மாநகராட்சி மீது அதிருப்தி.

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடைகள் பெறுவதில் தூத்துக்குடி மாநகராட்சி மீது அதிருப்தி தற்போது நீதிமன்றம் சென்று கடை வியாபாரிகள் உத்தரவு பெற்று வந்துள்ளார்கள். 


இதனால் புதியதாக ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு தூத்துக்குடியில் சில வாரங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டம் ருபாய் 58 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.


தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்படுவதற்கு முன்பு 59 கடை வியாபாரிகள் இருந்தனர். அவர்கள் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அப்போது மாற்றப்பட்டனர். புதிதாக ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் மீண்டும் கடைகள் தரப்படும் என கூறினர். அதன் படி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் திறந்த பின்பு, முன்பு இருந்த 59 கடை வியாபாரிகளுக்கு பேருந்து நிலையத்தில் கடை ஒதுக்குவதில் முன்னுரிமை அளிப்போம் என கூறினர்.


அதனால் முன்பு இருந்த படி கடை இருந்த இடம் ஒதுக்கீடு செய்வதில் தூத்துக்குடி மாநகராட்சியை முழுதாக நம்பி இருந்தனர். அதன்படி செய்ய வில்லை தாங்கள் ஏமாற்ற பட்டதாகவும் ஆளும் கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன் கடை பெற்றதாக தெரிவிக்கின்றார்கள். இதனால் முன்பு இருந்த கடை வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர், தற்போது நான்கு கடை வியாபாரிகள் நீதிமன்றம் உத்தரவு பெற்று உள்ளார்கள்.


இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமாரை இன்று பழைய பேருந்து நிலைய வியாபாரிகள் சந்திக்க போவதாகவும் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/