என்எல்சி சுரங்க விரிவாக்கப்பணிக்கு எடுத்த நிலத்தை சமன்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 அக்டோபர், 2023

என்எல்சி சுரங்க விரிவாக்கப்பணிக்கு எடுத்த நிலத்தை சமன்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு.

கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் பல நாட்களுக்குப் பிறகு என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணியில்  நிலம் மனைகளை என்எல்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் தற்போது சமன் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதனை அறிந்த வளையமாதேவி கிராம மக்கள், விவசாயிகள் பலர் பணி நடைபெறும் இடத்தில் ஒன்று திரண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இன்னமும் முழுமையான இழப்பீடு வந்து சேரவில்லை. 


வாழ்வாதார பாதுகாப்பு கிடைக்கவில்லை. வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை இல்லை.. தற்போது இந்த பகுதியிலேயே இன்னமும் கைப்பற்றப்பட்ட இடங்களில் சில ஏக்கர்களுக்கு இழப்பீடு தொகை வந்து சேரவில்லை என்று கூறி தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீட்டைப் பற்றி தான் கேட்கிறோமே தவிர நாங்கள் அதிகாரிகள் பணி செய்வதை தடுக்கவரவில்லை என விவசாயிகள் கூற அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்த போதிலும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மேடான பகுதிகள் சிலசமன்படுத்தப்பட்டது.  இதற்காக போலீசாரும் குவிக்கப்பட்டனர். 


பிறகு ஒரு மணி நேரத்திற்குப்பிறகு விவசாயிகள் கிராம மக்களின் கோரிக்கைப்படி பேச்சு வார்த்தைக்குப் பிறகு விரிவாக்க பணி மேற்கொள்ளப்படும் என்று நடைபெற்ற பணியை அதிகாரிகள் நிறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/