வாலாஜா அரசு மருத்துவமனை மனநல காப்பக பிரிவு வளாகத்தில் உலக மனநல நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 10 அக்டோபர், 2023

வாலாஜா அரசு மருத்துவமனை மனநல காப்பக பிரிவு வளாகத்தில் உலக மனநல நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

.com/img/a/

வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் இணைந்து வாலாஜா அரசு மருத்துவமனை மனநல காப்பக பிரிவு வளாகத்தில் உலக மனநல நாள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்த விழாவிற்கு வாலாஜா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் Dr.உஷா நந்தினி அவர்கள் தலைமை வகித்தார்கள். மருத்துவர்கள் தினேஷ் பாபு, கோகுல், நர்மதா, திவ்யா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இணை இயக்குனர் Dr.விஜயா முரளி அவர்களும், வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களும் மற்றும் அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 


பொதுமக்கள் மத்தியில் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி நர்சிங் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நாடகம், கலை நிகழ்ச்சிகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அசோசியேஷன் சார்பில் மனநல பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad