ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுபானம் மற்றும் சேலைகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சுங்கிலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்குதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 அக்டோபர், 2023

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுபானம் மற்றும் சேலைகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சுங்கிலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்குதல்.

மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 109 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அதில் மதுபானம் மற்றும் சேலைகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சுங்கிலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்குதல் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி. பயணிகளாக மதுரைக்கு வந்தவர்களில் சிலர் விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் கொண்டு வந்த நிலையில் 1 இந்தியன் மற்றும் 3 ஸ்ரீலங்கன் உட்பட 4 பேரை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்கியதில் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  ஓருவர் அனுமதி.


கடந்த 3ஆம் தேதி திருச்சி வழியாக  செல்வகுமார் இலங்கை சென்றுள்ளார். அங்கிருந்து பாங்காங் செல்லும் விமான ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் இன்று  இலங்கையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்கியதில் கை கழுத்து தோள்பட்டை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது முதலுதவி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் செல்வகுமார் என்பவருக்கு மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகவினர் தாக்கியதில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்காவினர் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் அதிக  சுங்க கட்டணம் மற்றும் வசூல் செய்வது அவருக்கான பில் வரி சான்று தருவதில்லை என குற்றச்சாட்டும் உள்ளது. மேலும் தங்கம் கடத்தல் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை கடத்தல் தங்கம் பிடிபட்டு மூன்று நான்கு நாட்களுக்குப் பின் தான் அறிவிப்புகள் வெளியாகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. 


முன்பு கடத்தல் தங்கம் பிடிபட்டவுடன் உடனுக்குடனே செய்திகள் வந்த நிலையில் தற்போது தாமதமான செய்திகள் வருவவருவதிற்கு கடத்தல்காரர்களுக்கு  சுங்க இலாக்க வினர் உடந்தையாக செயல்படுவது போன்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில்  வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் பயணிகளிடம் மதுபானம் பறிமுதல் மற்றும் கூடுதல் சுங்க கட்டணம் போன்றவற்றிற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


இன்று  காலை ஒன்பது இருபது மணிக்கு இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்பபைஸ்  ஜெட் விமானத்தில் 2 குழந்தைகள் உட்பட 109 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் 9.15 மணிக்கு மதுரை வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த செல்வகுமார், இலங்கையை சேர்ந்த முகமது சில்மி, சந்திர சாகர், சதீஸ்வரன் உள்ளிட்ட வியாபாரிகள் 15 பேர் இலங்கையிலிருந்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் விற்பனைக்காக பயணிகளின் சட்ட திட்டத்தின் படி 25 கிலோ எடையில் பொருட்கள் மற்றும் தங்களது உடமைகளை கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து குறிப்பிட்ட 2 லிட்டர் அளவுக்கு மது பாட்டில்களுக்கும் விதி முறைக்குமேல் அதிகமாக வாங்கி வந்துள்ளதாக தெரிகிறது. 


இதனை தொடர்ந்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் அந்தப் பயணிகளை தாக்கியுள்ளனர். பயணிகள் மது பாட்டில்களுக்கு வரி கட்டுவதாக கூறினாலும் ஏற்காமல் சுங்க இலாகவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர் இதில் காயம் அடைந்த செல்வகுமார், முகமது சில்மி, சந்திர சாகர், சதீஸ்வரன் ஆகியோர் உள் காயங்களுடன் மதுரை விமான நிலையத்தில் தாங்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 3 பயணிகள் தாக்கப்பட்டதால் இத்தாக்குதலை கண்டிக்கும் விதமாக இந்தியா எம்பசியில் புகார் கொடுக்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


மேலும் மதுரை விமான நிலையத்தில் அதிகமாக பொருட்கள் கொண்டு வருபவர்கள் மீது உரிய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இது போல் நடைபெற்று வருவதாகவும் இதற்கு திருச்சி சுங்கத்துறை உதவி ஆணையர் இப்புகார் சம்பந்தப்பட்ட தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/