கடலூர் மாவட்டம். புவனகிரி வட்டம் .மருதூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் இ சேவை மைய கட்டிடத்தில் ஊராட்சி செயலாளர் பழனி இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்தும் பருவ காலம் மழையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தனர்
இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் இக்கிராம ஊராட்சியில் ஆறு வார்டுகள் கொண்ட ஊராட்சியாகம் மூன்று வார்டு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர் மீதமுள்ள வார்டு உறுப்பினர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்குறியாக உள்ளன தமிழக முழுவதும் இன்று 12.525 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று காணொளி வாயிலாக கிராம சபை கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றி வரும் நிலையில் அரசின் சாதனைகள் குறும்படங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும் பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து கிராம சபை கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று அனைத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும் அழைப்பிதழ்களை அனுப்பி உள்ள நிலையில் ஊராட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் கலந்து கொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக