பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் டிஜிட்டல் சகி Access livelihoods சார்பில் மூலம்பயிற்சி 5 நாட்கள் முகாம் நடைபெறுகிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் டிஜிட்டல் சகி Access livelihoods சார்பில் மூலம்பயிற்சி 5 நாட்கள் முகாம் நடைபெறுகிறது.

திருமங்கலம் அருகே கள்ளிக்குடியில்  LNT Access livelihoods  நிறுவனம் சார்பில் பெண் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சார்பில் ஐந்து நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள் அவர்களது வீட்டிலே இருந்தபடி தொழில் துவங்குவதற்கு ஏற்ற வகையில் வங்கி மூலமாக கடன் உதவி கொடுத்து தொழில் துவங்குவதற்கான ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி பெண்களுக்கு கடன் வசதி செய்து கொடுக்கிறது. அதன் அடிப்படையில் பயிற்சி முகாம் துவங்கப்பட்டது. 


இதில் கள்ளிக்குடி சுற்றி உள்ள கிராமங்களான எஸ்.பி நத்தம், வில்லூர், முனியாண்டிபுரம், வடக்கம்பட்டி ,ஆகிய பகுதியில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர் நாகேஸ்வரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் திருமங்கலம் கிளஸ்டர் மேனேஜர் விஜி அகத்தாப்பட்டி தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் RNதோட்டக்கலை நிபுணர் ராஜேஷ் நல்லையா, டிஜிட்டல் சகி எல் அண்ட் டி ஸ்பான்சர் ஹைதராபாத் மற்றும் டிஜிட்டல் சகி உறுப்பினர்கள்  மங்கையர்க்கரசி கயல்விழி ரேவதி கனக ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/