அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா - எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

திங்கள், 16 அக்டோபர், 2023

அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா - எஸ்.பி.சண்முகநாதன் அறிக்கை.

.com/img/a/

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவின் 52வது ஆண்டு அக்டோபர் 17-ல் தொடக்க விழா நடைபெற உள்ளது. இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கி புரட்சித் தலைவி மறைந்த தமிழக முதல்வர் அம்மா வளர்த்து புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழிநடத்தி வரும் அ.இ.அதிமுக வின் 52வது ஆண்டு தொடக்க விழா வரும் அக்டோபர் 17 செவ்வாய்கிழமை அன்று சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படுகிறது.


அன்றைய தினம் கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தூத்துக்குடியில் காலை 09.00 மணிக்கு டூவிபுரம் மாவட்ட கழக அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெ உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பின் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு எனது தலைமையில் மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடப்படுகிறது.


மேலும் 52வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று தொகுதிகளில் மூன்று நாட்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் நடைபெறுகிறது. அக்டோபர் 17 மாலை 05 மணிக்கு தூத்துக்குடியில் டூவிபுரம் 5 மெயின் அண்ணா நகர் 7 சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.


அதில் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட கழக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்வுமான ஆர்.அண்ணாதுரை தலைமைக் கழகப் பேச்சாளர்கள் புதுகை எம். செல்லம், நாஞ்சில் ஞானதாஸ் ஆகியோரும் அக்டோபர் 26 வியாழக்கிழமை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரும் கழக மகளிர் அணி துணைச் செயலாளருமான வி.எம்.இராஜலெட்சுமி, தலைமைக் கழக பேச்சாளர் ஆண்டிபட்டி ஆர்.உமாசங்கர் ஆகியோரும் அக்டோபர் 28 சனிக்கிழமை அன்று திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நானும் தலைமைக் கழக பேச்சாளர்கள் மதுரை எம்.ஜி.பாண்டியன், நெல்லை எல்.கபாலி அகியோரும் பங்கேற்று பேசுகிறோம்.


இந்த பொதுக்கூட்டங்களில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்வதோடு அட்டோபர் 17 கழக ஆண்டு விழா அன்று மாவட்டம் முழுவதும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் படங்களுக்கு மரியாதை செய்தும் கழக கொடிகளை ஏற்றியும் கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad