கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது - 4½கிலோ கஞ்சா பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

கஞ்சா வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது - 4½கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த எதிரிகள் கைது - 4 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று (21.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.


அப்போது ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மகன்களான சின்னத்தம்பி (26), செல்வராஜ் (எ) செல்லக்குட்டி (28) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரிகளான சின்னத்தம்பி மற்றும் செல்வராஜ் (எ) செல்லக்குட்டி ஆகியோரை கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேற்படி எதிரிகளிடமிருந்து 4 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 2 வழக்குகளும், செல்வராஜ் (எ) செல்லக்குட்டி மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், இளஞ்சிறார் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/