குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் கைது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் கைது.

.com/img/a/

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் வயது 36. இவர், துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து வருகிறார்.


துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இன்று பகல் ஒரு மணி அளவில் மதுரை விமான நிலைய வந்தார் .
அவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பார்த்ததில், அவர் மீது 2012 ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


அவர் தலைமறைவாக இருந்தது ஒட்டி அவர் தேடப்படும் குற்ற வழியாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அனைத்து விமான நிலையங்களிலும் அறிவிப்பு ஓட்டப்பட்டது. இந்நிலையில் ,11 ஆண்டுகள் கழித்து பிளம்பர் ராஜேஷ் மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டார். 


இதனைத் தொடர்ந்து, மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தலைமறைவான வாலிபர் 11 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டது குறித்து மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad