10 வயது ஞானகுழந்தை சூரிய நாராயணனுக்கு இறையருள் செல்வன் விருது முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

10 வயது ஞானகுழந்தை சூரிய நாராயணனுக்கு இறையருள் செல்வன் விருது முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.

சென்னையைச் சேர்ந்த 10 வயது ஞானகுழந்தை சூரிய நாராயணனுக்கு இறையருள் செல்வன் விருதினை மதுரையில் நடைபெற்ற விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கி பாராட்டினார். இது பற்றிய விவரம் வருமாறு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு  மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் சென்னையைச் சேர்ந்த பத்து வயது ஞான குழந்தை சூரிய நாராயணனின் கர்நாடகா இசை கச்சேரி மற்றும் பாராட்டு விழா காமராஜர் சாலை  தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்க அரங்கில்  நடைபெற்றது. 


நிகழ்வில் டாக்டர் கண்டதேவிவிஜயராகவன் வயலின், கும்பகோணம் டாக்டர் சரவணன் மிருதங்கம், புதுக்கோட்டை சுரேஷ் கடம் வாசித்தனர், முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு  சூர்ய நாராயணனுக்கு இறையருள் செல்வன் விருது வழங்கி  பேசியதாவது:  இசைக்கு இருக்கும் வலிமை மிகப் பெரியது. இசைக்கு மயங்காதவர்கள் உலகில் யாரும் கிடையாது. விளையாட பயிற்சி எடுத்தால் வந்துடும். பேசுவதற்கு பயிற்சி எடுத்தால் வந்துடும். ஆனால்  குழந்தை பாடுவதற்கு தெய்வ அருள் வேண்டும்.


யார் வேண்டுமானாலும் பாடலாம். அதை முகபாவனை உடன் பாடுவதற்கு தெய்வ கடாட்சம் வேண்டும். அது இந்த சிறுவனுக்கு கிடைத்து இருக்கிறது. அது   எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கர்நாடக இசையை ஆன்மீகத்தில் ரசிக்கும்படி பத்து வயதினிலே இந்த சிறுவன் பாடி இருப்பது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. என்றார். இந்த அரங்கில் கூடிய கூட்டம் சேர்த்த கூட்டம் இல்ல சேர்ந்த கூட்டம். சிறுவனின் குரல் விரைவில் பெரிய திரையில் ஒலிக்க வேண்டும் என்றார்.


இந்த காலத்தில் பேச நேரமில்லை பார்க்க நேரமில்லை செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் இப்போ அரசு ஆயிரம் ரூபாய் கொடுத்ததும்  போனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் மெசேஜ் வரும் என்று சொன்னதால் செல்போனையே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.


அந்தளவுக்கு செல்போனில் மூழ்கி உள்ள நிலையில் இது போன்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தி வரும் நெல்லை பாலுவையும் பாராட்டுகிறேன் என்றார். இந்த விழாவில் மதுரை ராம்சந்திரா கண் மருத்துவமனை சேர்மன் டாக்டர் சீனிவாசன், சட்ட  மன்ற உறுப்பினர்கள் எஸ்எஸ்.சரவணன், டாக்டர் சரவணன் மற்றும் தொழிலதிபர் சூரஜ் சுந்தரசங்கர், ஆடிட்டர் சேதுமாதவா, அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/