புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்த A நல்லதம்பி MLA.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட சி2539 பொம்மிகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சங்கத்தின் கீழ் இயங்கும் திம்மணாமுத்தூர் நியாய விலை கடையிலிருந்து பிரித்து பம்பாகுட்டை பகுதிக்கு புதிய பகுதி நேர நியாய விலை கடையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ பாஸ்கரன் பாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அவர்கள் கடையை திறந்து வைத்து விழா பேரூரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் திரு பாலசுப்பிரமணியம் கூட்டுறவு சார்பதிவாளர்கள் தர்மேந்திரன் மற்றும் கோபிநாதன், பொம்மிகுப்பம் சங்க தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் எம் ஜி காந்தி, எம் ராஜேந்திரன், மாவட்ட ஆவின் பால் இயக்குனர் சின்னபையன் மற்றும் ஜெயகோபி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீரமணி மற்றும் சாமு, சாமன்னன், ரகு, அன்பு, ராமலிங்கம், சுபாஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/