செலந்தம்பள்ளி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்த A நல்லதம்பி MLA. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 செப்டம்பர், 2023

செலந்தம்பள்ளி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்த A நல்லதம்பி MLA.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட செலந்தம்பள்ளி ஊராட்சியில், 1) பதினைந்தாவது நிதி குழு (2021-22) மானியத்தில் இருந்து சுமார் 13.11 லட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 2) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் (2022-23) கீழ் சுமார் 13.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடம், ஆகிய பணிகள் முழுவதும் நிறைவடைந்து திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அவர்களால் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் மற்றும் கருணாநிதி,பொறியாளர் தொட்லாமா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருணாசலம், ஒன்றிய குழு துணை தலைவர் டி ஆர் ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திர போஸ்,மாவட்ட தொண்டர் அணி தலைவர் ராமச்சந்திரன், மாவட்டக் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் எஸ் சி விஜயகுமார், மாவட்ட பிரதிநிதி சிவலிங்கம், செல்வராஜ்,ரகு, சின்னபையன், ஆசிரியர் பிச்சாண்டி, உமாகாந்தன், ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/