செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ப்ளூ பீச் (Blue Beach) கடற்கரை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் சிறு தானிய ஆண்டையொட்டி, சிறு தானிய உணவு பழக்கவழக்க பிரசாரத்தை முன்னெடுக்கும் விதமாக பள்ளி கல்லுரி மாணவர்கள் பங்கேற்ற பிரச்சார நடைபயணம் கோவளம் ப்ளூ பீச் (Blue Beach) கடற்கரையில் நடைபெற்றது.
இப்பிரச்சார பயணத்தை மாவட்ட ஆட்சி தலைவர் ராகுல்நாத் IAS அவர்கள் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பாலாஜி முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா தங்கம் சுந்தர், ஒன்றிய குழு உறுப்பினர் யாஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாமல்லபுரம் சிற்ப கல்லூரி மாணவர்கள் மணல் சிற்பங்களை செதுக்கி வைத்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் (ICDS) சார்பில் சத்தான உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததோடு, சித்த மருத்துவ அரங்கும் அமைந்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் அவர்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் அவர்களும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு சிறுதானிய உணவு சிறப்புகளையும், அதை உட்கொள்ள வேண்டிய அவசியத்தையும், எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக