திருப்பத்தூர் மாவட்டத்தில் "இமைகள் திட்டம்" மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 செப்டம்பர், 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் "இமைகள் திட்டம்" மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.


திருப்பத்தூர் மாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் "இமைகள் திட்டம்" மற்றும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.S.லதா, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர், திரு.விஸ்வநாதன் அவர்கள் ஏற்படுத்தினார்கள்.

இன்று 12.09.2023 திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி, குழந்தை திருமணம் குறித்தும் Cyber Crime மற்றும் போதை பொருள் ஒழிப்பு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 


மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாவட்ட சமூக நல அலுவலர் DSWO, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் DCPU, சமூக ஆர்வளர்கள், மற்றும் சுமார் 400 மாணவர்கள் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/