சேத்தியாத்தோப்பு அருகே உணவு, இறைச்சி குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுவதை தடுக்க வேண்டும். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

சேத்தியாத்தோப்பு அருகே உணவு, இறைச்சி குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் கிராமப்பகுதியில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இந்த சாலையில் வாய்க்கால் ஓரங்களில் ஹோட்டல் உணவு குப்பைகள், இறைச்சி கழிவுகள், மதுபாட்டில்கள், போன்ற பல்வேறு குப்பைகளை மர்மநபர்கள் தொடர்ந்து கொட்டிச் செல்கின்றனர். 


இதனால் இப்பகுதிகளில துர்நாற்றம் ஏற்பட்டு, அருகில்  செல்லும் நீர் ஆதாரத்தையும் பாதிக்கிறது. மேலும் இவை நோய் தொற்று ஏற்படுத்தும் படியாகவும் இருக்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு கிராமப் பகுதிகளில் இதுபோன்று நீர்நிலை மற்றும் சாலை ஓரமாக  குப்பைகள் கொட்டப்பட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்த்து சுற்றுப்புற சூழ்நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டி அப்படி சாலையோரம் குப்பைகளை கொட்டுபவர்களை அறிவுறுத்தியோ அல்லது தண்டித்தோ அதிகாரிகள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும் என சமூக ஆர்வலர்கள, இதைக் கடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் இப்பகுதியினர் ஆகியோர் கோரிக்கை வைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/