பொன்னமராவதியில் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

பொன்னமராவதியில் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

.com/img/a/

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை சார்பில் ஸ்ரீ பட்டமராத்தன் டாடா ஏசி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், பயணிகள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.திருச்சி சரக காவல்துறைத் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின்படி துணைத்தலைவர் பகலவன் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆலோசனையின்படி பொன்னமராவதி ஸ்ரீ பட்டமரத்தான் டாடா ஏசி வாகனம் நிறுத்துமிடத்தில் நடைபெற்ற காவல்துறை, போக்குவரத்து காவல்துறை சார்பிலான விழிப்புணர்வுக்கு பொன்னமராவதி காவல் துணைக்கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் தலைமையில் ஸ்ரீ பட்டமராத்தான் டாடா ஏசி ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ஸ்ரீ பிரசன்னா சரவணன் முன்னிலையில் தொடங்கியது.


இவ்விழிப்புணர்வில் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் செல்போன் பேசிக்கொண்டே வாகன ஓட்டக்கூடாது,மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஒட்ட வேண்டும் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பெற்றோர்கள் அனுமதிக்ககூடாது, இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும்,மோட்டர் வானக சட்டத்தின்படி முறையான ஆவணங்களின் நகல்களை வாகனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்திய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் வாகன ஒட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு சட்டம் பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


இவ்விழிப்புணர்வில் ஸ்ரீ பட்டமரத்தான் டாடா ஏசி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு அச்சங்கத்தின் சார்பிலான அடையாள அட்டையை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் வழங்கினர்.இதில் சாலை பாதுகாப்பு பற்றிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறையினர், போக்குவரத்து காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் என 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பட்டமரத்தான் டாடா ஏசி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad