நாசரேத்தில் மாநில கால்பந்து போட்டி - சென்னை அணிக்கு வெற்றி கோப்பையை அமைச்சர் வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

நாசரேத்தில் மாநில கால்பந்து போட்டி - சென்னை அணிக்கு வெற்றி கோப்பையை அமைச்சர் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கிடையேயான மாநில கால்பந்து போட்டி கடந்த செப்டம்பர்  4ஆம் தேதி  முதல் துவங்கி 9ஆம் தேதி வரை நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று காலை நடைபெற்ற 3-வது, 4-வது இடத்திற்கான போட்டியில் ஊட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி அணியும், ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணியும் மோதின. இதில் ஊட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று 3- வது இடத்தையும், ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி 4- வந்து இடத்தையும் பெற்றது.


மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி அணியும், திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் சென்னை டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு தமிழக மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் தலைமை வகித்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 20,000 ரொக்கமும் மர்காஷிஸ் கோப்பையையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


2-வது இடத்தைப் பெற்ற திருச்சி காஜா மியான் மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 15,000 ரொக்கமும் மர்காஷிஸ் டிராபியும் வழங்கப்பட்டது. 3-வது பிடித்த ஊட்டி திரு இருதய மேல்நிலைப்பள்ளி அணிக்கு ரூபாய் 10,000 ரொக்கமும், எஸ்.ஏ.தாமஸ் கோப்பையும் வழங்கப்பட்டது. 4-வது இடத்தைப்பிடித்த ஆறுமுகனேரி பியல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணிக்கு ரூபாய் 5000 ரொக்கமும் எஸ்.ஏ.தாமஸ் கோப்பையும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/