திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் சுகாதார அலுவலகம் இயங்குகிறதா இல்லையா? பொதுமக்கள் சந்தேகம்? - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் சுகாதார அலுவலகம் இயங்குகிறதா இல்லையா? பொதுமக்கள் சந்தேகம்?

திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் சுகாதார அலுவலகம் இயங்குகிறதா இல்லையா?பொதுமக்கள் சந்தேகம்? 


திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 11வது வார்டு அங்காளம்மன் கோவில் தெரு, சாஸ்திரி வீதியில் அப்பார்ட்மெண்ட் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மண் ரோடு முழுவதும் சேறு உள்ளது கழிவு நீரும் தேங்கியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை உள்ளது இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் முதியவர்கள் வாகன ஓட்டிகள் இது வழியாகத்தான் செல்ல வேண்டியது உள்ளது இதை பலமுறை சுகாதார அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு சாதகமாகத்தான் சுகாதார அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள் அடுக்கு மாடி குடியிருப்பு விதிகளின் மீறி சாக்கடை தண்ணீரை பொதுமக்கள் நடமாடும் பகுதியில் விடுவது தவறாகும் சுகாதார அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இந்த பகுதி குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாகும். 


மாவட்ட செய்தியாளர்
 அ.காஜா மைதீன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/