சோளிங்கரின் அவல நிலை புலம்பும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சோளிங்கரின் அவல நிலை புலம்பும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிகுட்பட்ட திருத்தணி சாலை முக்கியமான சாலை ஆகும் இந்த சாலை வழியாக ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி, போன்ற முக்கிய நகரங்களுக்கும், 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வருவதற்கும் அதிக பயன்பாட்டிலுள்ள சாலையாகும்  இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு மிகவும்   குறுகிய நிலையில் உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  வாகனங்கள் அவ்வப்போது ஒன்றுடன் ஒன்று  முட்டி மோதிக் கொள்கின்றன  அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன  இது குறித்து அங்குள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்த போது  சோளிங்கர் பகுதியில்  திமுக, அதிமுக  கட்சியை சேர்ந்த முக்கிய  பிரமுகர்கள்  மாறி, மாறி ஆட்சி  ஆட்சி பீடத்திற்கு வந்தாலும்  சோளிங்கர், திருத்தணி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிச்சலுக்கு மாற்றுப் பாதை அமைத்து தருவதற்கு இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.


சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக ஏ.எம். முனிரத்தினம் செயல்பட்டு வருகிறார், இவர் சோளிங்கரிலே வசித்து வந்தாலும் போக்குவரத்து நெரிசல் சரி செய்வதற்கு   இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்கின்றனர், மேலும் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  கழிவுநீர் கால்வாய்கள் காணாமல் போயிருக்கின்றன  மழை வரும்  பொழுதெல்லாம்  சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது  குப்பைகள் ஆங்காங்கே  ஒட்டி வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது  நகரம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருக்கின்றன.


பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது  நகராட்சி  நிர்வாகத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியாகவே இருப்பதாக புலம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/