ஊரப்பாக்கத்தில் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 செப்டம்பர், 2023

ஊரப்பாக்கத்தில் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் ₹.22 லட்சம் மதிப்பீட்டில் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன்  திறந்து வைத்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ஆம் தேதி செங்கல்பட்டு வட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு வண்டலூர் வட்டம் உதயமானது. இதில் வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் மாம்பாக்கம் ஆகிய குறு வட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. 


இந்நிலையில், மேற்படி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வண்டலூரில் உள்ள தாசில்தார் அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வந்தன. இதனை அடுத்து ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இயங்கி வரும் நூலகம் கட்டிடம் அருகில் ₹.22 லட்சம் மதிப்பீட்டில் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டன. அதன் திறப்பு விழா நடைபெற்றது. 


இதில் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஜே.கே.தினேஷ், பி.எஸ்.ராஜா, மோகனாகண்ணன், ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வண்டலூர் வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் வி.எஸ்.ஆராமுதன், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ₹.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். 


இதனையடுத்து அருகில் உள்ள கோலாச்சியம்மன் கோயில் குளத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு நடைபெற்று வரும் குளம் சீரமைப்பு பணியினை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் உத்தரவிட்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/