பள்ளியில் காலை உணவு திட்டப் பணியாளர் பிரச்சனையால் மாணவர்களின் சான்றிதழை திருப்பிக் கேட்ட பெற்றோர்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 செப்டம்பர், 2023

பள்ளியில் காலை உணவு திட்டப் பணியாளர் பிரச்சனையால் மாணவர்களின் சான்றிதழை திருப்பிக் கேட்ட பெற்றோர்கள்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அருகே ஆண்டிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்திற்காக அடலின்ரெக்ஸி, செல்வராணி, பரமேஸ்வரி ஆகிய மூன்று பேர் ஒரு மாத காலமாக பணி செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று திடீரென அடலின் ரெக்ஸி மற்றும் செல்வராணி இருவருக்கும் பணிக்கு வர வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளது. 


இதில் இன்று பள்ளிக்கு வந்த அடலின் ரெக்ஸியோடு அவருடைய தெரு மக்களும் சேர்ந்து இவரை வேலைக்கு வைத்துக் கொள்ளாவிட்டால் எங்களது பிள்ளைகளையும் நாங்கள் பள்ளிக்கு படிக்க அனுப்ப மாட்டோம். எனக் கூறி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 25 மாணவர்களை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்கிறோம் என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காலை உணவுத் திட்டத்தில் பணி செய்து வந்த அடலின் ரெக்ஸி ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும், செல்வராணி, பரமேஸ்வரி ஆகிய இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். தற்போது அடலின்ரெக்ஸி, செல்வராணி ஆகிய இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டு பரமேஸ்வரி மட்டுமே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இதுகுறித்து பாதிக்கப்பட்ட அடலின் ரெக்ஸியோடு வந்த மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கும்போது காலை உணவு திட்டத்திற்காக  பணிக்கு சேர்த்தார்கள். இப்போது என்ன காரணத்திற்காக பணிக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். சமுதாய ரீதியாக ஏற்றத்தாழ்வு பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாக  மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். பணியில் சேர்ந்தது மூன்று பேர். ஆனால் ஒருத்தர் மட்டும் பணிக்கு வருகிறார். இரண்டு பேரை நீக்குகிறார்கள் என்றால் என்ன காரணம் என்று தங்கள் சந்தேகத்தை தெரிவிக்கின்றனர். 


நீக்கப்பட்ட காலை உணவு திட்டப்பணியாளர் அடலின்ரெக்ஸியை பணிக்கு திரும்ப அழைக்காவிட்டால் அவரின் பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 25 பேரின் மாற்றுச் சான்றிதழை திரும்ப பெற்றுக் கொண்டு வேறு பள்ளிக்கு செல்ல போவதாக மாணவர்களின் பெற்றோர்கள்தெரிவிக்கின்றனர். இச்செய்தி அறிந்து பள்ளிக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் திட்ட  அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்படி பழையபடி மூன்று பேரையும் வேலை பார்க்குமாறு அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/