தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 செப்டம்பர், 2023

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை.

tuxpi.com.1693823862
மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோவிலிலே, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதியில், வராகி அம்மன் சன்னதியில் சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரஹோமம், மகாவிஷ்ணு ஹோமம் ,தன்வந்திரி ஹோமம் நடைபெறவது வழக்கம்.


தேய்பிறைப் பற்றிய முன்னிட்டு, இன்று காலை மஹா யாகம் நடைபெற்றது. இதை அடுத்து, பக்தர்கள் சார்பில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அதைத் தொடர்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் பலர் வராகி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும் வழிபட்டனர். 


இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய ஆன்மிகக் குழு மற்றும் கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக, மகா சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு, மதுரையில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் ,சர்வேஸ்வர ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், ஒத்தப்பட்டி அருள்மிகு குபேர விநாயகர் ஆலயம் ஆகிய கோள்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை மற்றும் கொழுக்கட்டை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad